திமுக கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன். இவர் பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனாக இருந்த நிலையில் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தொலைபேசி மூலம் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடைய உடல் பாளையங்கோட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் அவருடைய மறைவுக்கு திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.