பாகிஸ்தான் வீரர் தேர்வு செய்த சிறந்த பிளேயிங் லெவன் அணி… பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள்?..!!
SeithiSolai Tamil May 13, 2025 05:48 PM

நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இளம் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான சைன் அயூப் தற்போது டி20 கிரிக்கெட் போட்டியில் அசத்தி வரும் வீரர்களைக் கொண்டு பிளேயிங் லெவனை உருவாக்கியுள்ளார்.

அந்த அணியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரை நீக்கிவிட்டு, இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த பிளேயிங் லெவன் பட்டியல் இதோ..

1. பகர் ஜமான் (பாகிஸ்தான்)

2. டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)

3. பட்லர் (இங்கிலாந்து)

4. நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்)

5. கிளாசென் (தென் ஆப்பிரிக்கா)

6. ஹர்திக் பாண்ட்யா (இந்தியா)

7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

8. ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

9. சாண்ட்னர் (நியூசிலாந்து)

10. ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

11. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.