ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் உச்சக் கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா? என தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் அந்த வகையில் இன்று சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட முயற்சித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.