#featured_image %name%
மே மாதம் 98ல்…. – பொக்கைவாய் கிழவரும் அகம் மகிழ்ந்த சமாச்சாரத்திற்கு இன்று வயது 27. அது அந்த பாடல் வரிகளுக்கு அல்ல…. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் எனும் சிற்றூரில் வைத்து நம்மவர்கள் நடத்திய அணு வெடிப்பு சோதனைகளுக்கு கிடைத்திட்ட வெற்றிக்கு….
பாரதப் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் 1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் மூன்று நிலைகளில் ஐந்து விதங்களில் இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதற்கான சங்கேத பெயர் #ஆஃப்ரேஷன்_ஷக்தி.
ஆனால் இதற்கு முன்னதாக 1974 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்த சமயத்தில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக அணு வெடிப்பு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அதற்கு கொடுக்கப்பட்டிருந்த சங்கேத பெயர் #சிரிக்கும்_புத்தா.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கியமானதொரு நாள். இதேபோன்றதொரு மே மாதத்தில் 18 ஆம் தேதி 1974 ஆண்டு காலை 8:45 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள #பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தி சாதித்தது இந்தியா.
உலக வல்லரசு நாடுகள் ஆடிப் போனது. அமெரிக்கா இதில் கோபம் கொண்டு கொந்தளித்தது. சீனா விக்கித்து நின்றது. இவை எல்லாம் அந்த அணுகுண்டு சோதனை ஏற்படுத்தின விளைவுகள்.
அசர வில்லை #இந்திரா. இது தான் பின்னாளில் இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா என பேச வைத்தது. ஆனால் இதற்கான பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. பாதைகளற்ற வழியில் சுவடு இல்லாத பயணம் என்றனர் அந்நாளில். காரணம் உலகின் அத்தனை உளவு நிறுவனங்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு இதனை நுட்பமாக சாதித்திருந்தது இந்தியா.
அவ்வளவு வெறியுடன் இந்த திட்டத்தினை முன்னெடுத்திருந்தார் இந்திராகாந்தி. ஆனால் இந்த திட்டம் அவர் காலத்தில் தொடங்கியது இல்லை.
1962-63 சீன போரின் தோல்விகளில் இருந்து பாடம் படித்தார் நேரு. அடுத்தடுத்த வருடங்களில் சீனா அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு வெற்றி கண்டது.
இந்திய நாடாளுமன்றத்தில் அணு குண்டு சோதனையை அணு குண்டு சோதனை மூலமாகவே பதில் சொல்ல வேண்டும் முதன் முதலில் முழங்கியதே நேரு தான். கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம்.
பதிலுக்கு தன் பலத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு வந்தது. ஏனெனில் நேருவின் செக்யூலரிஸ… சோஷியலிச… கொள்கைகளால் வாங்கி இருந்த அடி அப்படி.அதனால் அவற்றை கைவிட்டுவிட்டு இத்திட்டத்தினை முன்னெடுத்தார். ஆற்றாமையோடு மறைந்தும் போனார். 1966 களில் இதற்கான விதை ஊன்றப்பட்டது.
அப்போதெல்லாம் ஹோமி பாபா உறுதுணையாக நின்று ஊக்கப்படுத்தி வந்தார் தனது குழுவினரை. இந்த காலகட்டத்தில் அதன் உதிரி பாகங்களில் கவனம் செலுத்த செய்தார். வெவ்வாறான உபகரணங்கள் வடிவமைப்பு கண்டது இந்நாட்களில் தான்.
சும்மா இல்லாத பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது 1972 ஆண்டு போர் தொடுத்து மூக்குடைத்துக்கொண்டது. இம்முறை இந்திரா விடவில்லை. கட்டம் கட்டி குதறி தள்ளினார் பாகிஸ்தானை… அப்போது பிறந்தது தான் #பங்களாதேஷ் எனும் நாடு. இப்போது அதும் ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறது வேறு கதை.
அத்தனை தூரம் சாகஸம் காட்டினார்கள் அந்த சமயத்தில்….. இந்திய ராணுவமும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. வித்தை காட்டியிருந்தனர் இந்திய ராணுவத்தினர். இதில் இந்திய உளவு பிரிவான #ரா அட்டகாசம் செய்து இருந்தனர்.
இந்த சமயத்தில் தான் பாகிஸ்தானை பலமாக ஆதரித்து வந்த அமெரிக்கா பலவிதங்களில் இந்தியா, இந்திராவை மிரட்டி பணிய வைக்க முயன்றது. அமேரிக்காவே நேரிடையாக தலையிட்டது இந்த சமயத்தில் தான். தனது அதி நவீன போர் கப்பலை வங்காள விரிகுடாவில் கொண்டு வந்து நிலை நிறுத்தியது.
இந்திரா நேரிடையாக மோத ஆரம்பித்தார். கப்பலை அங்கிருந்து வெளியேறி சொன்னார். இந்த இடத்தில் அந்த சமயத்தில் தான் காட்சிக்குள் வந்தது ரஷ்யா. தனது அதிநவீன நீர்மூழ்கி கப்பலை ஓசையில்லாமல் கொண்டு வந்ததிருந்தனர். கெடு விதித்தனர். இந்தியா சற்றே ஆசுவாமானது அப்போது தான். வேறு வழியின்றி பின்வாங்கி சென்றது அமெரிக்க நாசகாரி கப்பல்.
அப்போதைய அமெரிக்க அதிபரை, ஒரு பெண்ணிடம் தோற்று வந்ததாக கேலி பேச ஆரம்பித்து இருந்தார்கள் அமெரிக்காவில். போதாகுறைக்கு இந்தியாவை கேலி செய்தனர்….. ரஷ்யா பின் ஒளிந்துக்கொண்டதாக…. இது மேலும் கோபம் மூட்டியது இந்திராவை. அப்போது கையில் எடுத்தது தான் இந்த அணு ஆயுத சோதனை.
அவர் அணு ஆயுத சோதனை செய்ய இரண்டே இரண்டு கேள்விகளை மாத்திரமே கேட்டார். எப்போது இதனை செய்ய முடியும், எங்கு வைத்து இதனை மேற்கொள்ள முடியும். கணக்கில்லாமல் நிதி இதற்கு மடைமாற்றப்பட்டது. அசூர வேகம் எடுத்தது திட்டம்.
சமாதானத்திற்கான அணு வெடிப்பு சோதனை என்று அந்நாளில் அறிவிக்கவும் செய்தார் அவர். பின்னாளில் அமெரிக்கா அந்த சோதனை குறித்த அறிக்கை ஒன்றில் இந்தியா திட்டமிட்ட இலக்கில் 40% மட்டுமே எட்டிப் பிடித்தது என்று பகடி செய்தது வேறு விஷயம்.
ஆனால் அந்நாளில் நம் பக்கத்தில் நடைபெற்றது பராக்கிரம வேலை அது. ஹோமி பாபா செய்திருந்த ஏற்பாட்டால் மற்ற காரியங்கள் அனைத்தும் முடிந்திருந்த நிலையில் யுரேனியம் செறிவூட்டலை கொண்டு ப்ளுடோனிய வடிவமைப்பு கனகச்சிதமாக நிறைவடைந்தது.
அதாவது 9 மாத காலத்தில். அமெரிக்க இந்த கட்டத்தை முதல் முறையாக அடைய 5 1/2 ஆண்டு காலம் ஆனாது. சீனாவிற்கு மூன்று ஆண்டுகள் ஏழு மாதம் பிடித்தது. ஆனால் இந்தியாவிற்கு வெறும் 9 மாதம் மட்டுமே ஆனது. அவ்வளவு துல்லியமான திட்டமிடல். அசத்தி இருந்தனர் அனைவரும். அவ்வளவு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு.
மொத்தமும் 72 பேர் கொண்ட குழு. நான்கு வட்டங்களாக பிரித்து வடிவமைத்து இருந்தார் இதன் தலைவர் #ராஜா_ராமன்னா. இதன் அடுத்த வட்டத்தில் இரண்டாம் நிலையில் தமிழர்கள் பலர் இடம் பெற்று இருந்தனர். திருநெல்வேலியை சேர்ந்த #P_K_ஐயங்கார்.,நியுக்ளிர் பிஸிஸ்ட், நாகப்பட்டினத்தை சேர்ந்த #சாம்பசிவ_வெங்கடேஸன். #TBRL இருந்தார்.
அடுத்த அடுக்கில் சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி #சிதம்பரம் இருந்தார். இந்த குழுவில் தான் நமது பெருமதிப்புக்குரிய #அப்துல்_கலாம் இடம் பெற்று இருந்தார். இவர்கள் எல்லோருமே சிறப்பாக செயல்பட்டனர். பலர் அலுவலகத்திலேயே குளித்து ஓய்வெடுத்து என தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.
அந்த நாளும் வந்தது. ஸ்வரன்_சிங் வெளியுறவு துறை அமைச்சர். மேற்கு மண்டல ராணுவ கட்டளை தளபதி C G பேவூர் என இருவருக்கு மாத்திரம் 36 மணிநேரத்திற்கு முன்பு தகவல் தரப்பட்டு உஷார் படுத்தி, தயாராக இருக்க சொன்னார்கள். இந்த திட்டத்திற்கு பீஸ் மேக்கிங் புத்தா பெயர் கொடுத்தார்கள்.
புத்த பூர்ணிமா தினத்தில் அந்த காலை வேளையில் ராஜஸ்தானிய நிலம் அதிர்ந்தது. உலகின் பலரது முகம் இருண்டது. தகவல் இப்படி தான் சொன்னார்களாம் அங்கிருந்து இந்திராவிற்கு புத்தர் சிரித்து விட்டார் என்று.
ஆனால்…… பாரதப் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் நடத்திப்பார்க்கப்பட்ட #ஆஃப்ரேஷன்_ஷக்தி அப்படியல்ல.. முழுமையான சோதனை திட்டமிடலாக அது அமைந்தது. பொதுவாக அணு வெடிப்பு சோதனையை இரண்டு விதங்களில் வகைப்படுத்துகிறார்கள். ஒன்று நியூக்ளியர் பிஷன், அணுக் கரு பிளவு. மற்றொன்று நியூக்ளியர் பியூஷன், அணுக் கரு பிணைப்பு என்பர்.
நம் சூரியனில் நடப்பது நியூக்ளியர் பியூஷன், அணுக் கரு பிணைப்பு ஆகும். அணு குண்டு தயாரிப்புகளில் அணுக் கரு பிளவு தத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இந்தியா இந்த இரண்டு விதங்களிலும்… அதாவது நியூக்ளியர் பிஷன் மற்றும் நியூக்ளியர் பியூஷன் ஆகிய இரண்டையுமே வெற்றிகரமாக இந்த இரண்டு தினங்களில்… மே 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் செய்து பார்த்தது. இது நடந்தது மே மாதம் 1998ல். இந்தியாவில் ஏழு இடங்களில் நம் தமிழகத்தில் இரண்டு இடங்கள் உட்பட….
கல்பாக்கம் மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில் அணு உலை அமைத்து மின்சார உற்பத்தி செய்து வருகிறோம்… இதில் கூடன்குளம் அணு உலை ரஷ்யாவுடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட நவீன அணு உலையாகும். இஃது பயன்பாட்டிற்கு வந்து விடக்கூடாது என்ற அமெரிக்க மிஷனரிகள் பிரம்ம பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்தனர் என்பது வேறு விஷயம்.இன்றளவும் இவர்களின் தோல் பாவை நடனங்கள் இங்கு உள்ள அவர்களின் கைப்பாவை மூலம் நடத்திக் காட்டிக் கொண்டு தான் வருகிறார்கள் என்பதும் நாம் மறுதலிக்கமுடியாத உண்மைகள்.
பொதுவாக அணு வெடிப்பு விஷயத்திற்கு இரண்டு விதங்களில் வருகிறது என்று பார்த்தோம் அல்லவா…. அதில் பெரும்பாலும் யுரேனியத்தை தான் அணுக் கரு பிளவிற்கு பயன்படுத்துவார்கள். அணு குண்டு என்றால் அதற்கு புளுடோனியம் என்கிற அணு கதிர் வீச்சு தனிமம் பயன்படுத்தப்படுகிறது.
அணு உலைகளில் யுரேனியம் (235) என்கிற தனிமத்தை நியூட்ரானைக் கொண்டு பிளக்க அஃது மூன்று நியூட்ரானையும், பேரியம் 139 மற்றும் க்ருப்ட்ரான் 94 ஆக உடைந்து பெறும் சக்தியை வெளிப்படுத்தி சிதைவடைகிறது.
இந்த சக்தியை ஆற்றலாக மடைமாற்றம் செய்கிறார்கள். இதனைத் தான் அணு உலைகளில் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
தற்போது இதனை எல்லாம் தாண்டி வேறு நிலைகளில் பல மடங்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறோம் நாம். இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள் மூலம் நாம் தற்போது தேனிக்கு அருகில் நியூட்ரீனோ ஆய்வு மையம் அமைத்து இருக்கிறோம்…… கூடிய விரைவில் உலகமே வியக்கும் வண்ணம் சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறோம்……
இந்த சோதனைகளை உலக அளவில் நாம் மட்டுமே மேற்கொள்ள இருக்கிறோம் என்பதே நம்மில் பலரும் அறிந்திராத அறிவியல் விஷயமாக இருக்கிறது.
ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் வழிந்தோட உழைத்த அப்துல் கலாம் பிறந்த மண்ணில் இன்று எதிலும் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமல்…. அவதானிப்பு இல்லாமல் நம்மில் பெரும்பாலான மக்கள் இருப்பது சரியான சமாச்சாரம் அல்ல….
இனி வரவிருக்கும் காலங்களில் அந்த வானத்தையும் வசப்படுத்திய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். அத்தனை திட்டங்கள் வரிசை கட்டி செயலில் உள்ளது. அப்படியான செயல் திட்டத்தின் ஓர் பகுதி தான் ஆப்ரேஷன் ஸிந்தூர்… இனி வரும் காலங்களில் அப்படி தான் பார்க்கப்படும்.
இந்த உலகமே பார்த்து பயந்த ஒரு சமாச்சாரம் அது. அணு ஆயுதங்களை மறைத்து வைத்து இருக்கும் இடத்தில் நேரிடையாக மிக துல்லியமாக தாக்கி விட்டு கமுக்கமாக இருந்திருக்கிறார்கள் நம்மவர்கள். இதற்கு முன் இந்த உலகில் யாருமே செய்யத் துணியாத ஒன்றை செய்து இருக்கிறார்கள். ஆத்து ஆத்து போகிறார்கள் மேற்கு உலக வாசிகள். அவர்களுக்கு இது புதியது.
ஒரு நாடு துணிந்தால்… ஒரு நாட்டிற்கு துணிச்சலான தலைமையை அது கொண்டு இருந்தால்….. என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கெல்லாம் இனி வரும் நாட்களில் இது உதாரணமாக அமையும்.
ஓர் நாட்டின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் மிலிட்டரி ஆப்ரேஷன் நேரிடையாக அடுத்த நாட்டுடன்…. அதுவும் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் நாட்டிமே பேசி இனி தாக்குதல் நடத்த வேண்டாம்….. கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டோம் என முறையிட…… சரி இன்று போய் நாளை வா என்கிற கதையாக…. அத்துடன் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள முடிந்திருக்கிறது என்றால்…… எப்பேர்ப்பட்ட விஷயம் இது.
அது தான் பாகிஸ்தான் விஷயத்தில் நடந்திருக்கிறது. எதை காட்டி பயமுறுத்துவதாக நினைத்து கொண்டு இருந்தார்களோ அதனையே நிர்மூலம் படுத்தி இருக்கிறார்கள்….. அதுவும் எல்லை தாண்டாமல்….. போர் அறிவிப்பு செய்யாமல்….
அத்துணை தூரம் துல்லி யமான உளவு தகவல்கள்…. MI என்கிற மிலிட்டரி இன்டலிஜென்ஸ் எத்தனை தூரம் நாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் இது. கொண்டாட வேண்டிய தருணம் இது. நாம் அப்படியா செய்கிறோம்.
ஏதோ ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டதாலேயே போர் நிறுத்தம் வந்துவிட்டது என ஒரு பன்னாடை பேச…. அப்படி பேச விட்டு ஒரு மாநில முதல்வர் வேடிக்கை பார்க்க முடிகிறது என்றால்…… எப்பேர்ப்பட்ட மன நோய் இது. அந்த வம்சத்தவருக்கே இது சொந்தம் என்கிற கேலி பேச்சுக்கு இடம் கொடுக்காதா…… ஏற்கனவே அதே கடற்கரை சாலையில் வைத்து தானே காலை உணவிற்கும் மத்திய உணவிற்குமான இடைவேளையில் ஒரு உண்ணாவிரதம் மேற்கொண்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டதின் நீட்சியாக அல்லவா இதுவும் பார்க்கப் படும் என்பதை கூட உணர முடியவில்லையா……
வாய் கூசாமல்… தேர்தல் நடக்கும் சமயத்தில் எல்லாம் எல்லையில் தாக்குதல் நடக்கிறது என எத்தனை தூரம் அவதூறு பேசியிருக்கிறார்கள் அன்று….
இன்று அங்கு அவர்களே பொதுவெளியில் வந்து இவையெல்லாம் எங்களுடைய ஸ்டாட்டிக்ஸ்…. நரித்தந்திரங்களில் ஒன்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்… அன்று இங்கு பேசியவர்களுக்கு என்ன தண்டனை…?!?!?
நேற்று இரவு 8 மணியளவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் பிரதமர் பேசினார்.
இனி…பாகிஸ்தானுடன் பேச ஒன்று மட்டுமே உள்ளது அது அவர்களின் தேசத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவது பற்றி மட்டுமே என்றார். அவர்களிடம் கேட்க ஒன்று மட்டுமே உள்ளது….. எப்போது எங்கள் தேசத்தில் இருந்து வெளியேற போகிறீர்கள்… என தீர்க்கமாக நெஞ்சுரத்துடன் கேட்டு இருக்கிறார். அவர் அப்படி கேட்டது பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை.
ஆடிப் போய் இருக்கிறார்கள் உலகத்தவர். எந்த பதட்டமும் இல்லை…
அலட்டலும் இல்லை. நிறுத்தி நிதானமாக பேசியது பார்த்து மலைத்து போய் நிற்கிறார்கள். பேரை தூக்க நாலு பேர்… பட்டத்தை பறிக்க நூறு பேர்….
எங்கோ தூரத்தில் எதிரொலிக்க… டொனால்ட் ட்ரம்ப்பின் உலக வல்லரசு பட்டத்திற்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டு நிற்க….. இவற்றை அநாயாசமாக கைப்பற்றி விட்டு சும்மா நிற்கிறார் இந்த உலகத் தலைவர். இனி எல்லாம் அப்படி தான்….. மாறப் போவதில்லை…. மாற்றிட ஒருவரும் பிறக்கவில்லை.
வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்.
News First Appeared in