ஹரித்வார் மாவட்டத்தின் ராணிக்கேத் பகுதியில், வனப்பகுதியில் நுழைந்த ஒரு சிறுத்தை, அங்கிருந்த நாய்களை வேட்டையாட முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக, அந்த நாய்களின் எதிர்வினை சிறுத்தைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக மாறியது. பொதுவாக பயந்து ஓடக்கூடிய நாய்கள், இதில் குழுவாக சேர்ந்து அந்த சிறுத்தையை முற்றிலும் சுற்றி வளைத்து, அதை கடுமையாக தாக்கின. அந்த நாய்கள் காட்டிய துணிச்சலும், ஒற்றுமையும் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சிறுத்தை உயிர் பாதுகாப்புக்காக திடீரென அந்த இடத்திலிருந்து ஓடிச்சென்று தப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் முழு வீடியோ அங்குள்ளவர்கள் மூலம் பதிவுசெய்யப்பட்டு, தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலானோர் இது போன்ற ஒரு அபூர்வமான காட்சி முதன்முறையாக தான் காண்கிறோம் எனக் கூறுகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ மிகவும் வைரலாகி வர நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.