சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஜெயம் ரவி என்கின்ற ரவி மோகனும், பாடகி ஜெனிஷாவும் தங்கபட்டுடையில் ஜோடியாக வலம் வந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. ரவி மோகன் தனது மனைவியை பிரிய உள்ளதாக கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரை உலகில் க்யூட் கப்பல் என்று அறியப்பட்டவர்கள் தான் ரவி-ஆர்த்தி ஜோடி. இவர்களது பிரிவுக்கு காரணம் ஜெனிஷா என்றும் பேசப்பட்டது. ஆனால் அதற்கு ரவி மறுப்பு தெரிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் ரவியும், ஜெனிஷாவும் ஜோடியாக பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
அது மட்டுமின்றி ரவி மோகன் அணிந்திருந்த வாட்ச்சும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் Longines Conquest Chronograph என்ற வாட்சை அணிந்திருந்தார். இதன் விலை ரூபாய் 3.75 லட்சம் என்று கூறப்படுகிறது. இதை ரவி மோகனுக்கு, பாடகி ஜெனிஷா வாங்கி கொடுத்த பரிசு என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது தற்போது இணையதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.