பிரபல நடிகர் பார்க்கிங்கில் வைத்து கொடூர கொலை..!! அலறி துடித்த காதலி..!!
Newstm Tamil May 14, 2025 06:48 PM

கவுகாத்தியில் நடிகர் மிருகங்கா, தனது காதலியுடன் நேற்று மதியம் 1 மணியளவில் கார்ச்சுக்கில் உள்ள ஹாய் சிட்டி இன் ஹோட்டலுக்குச் சென்று 2-3 மணி நேரத்திற்குப் பிறகு வெளியே சென்றனர். பின்னர், ஹோட்டலின் வாகன நிறுத்தும் இடத்தில் தான், நடிகர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட மோதலாகத் தொடங்கிய மோதல், பின்னர் ஒரு கொலைவெறித் தாக்குதலாக மாறியது.

குற்றம் சாட்டப்பட்ட ராஜு அலி என்பர், மிருகங்காவின் தலையில் கத்தியால் தாக்கி, பின்னர் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மிருகங்கா பரிதாபமாக உயிரிழந்தார். கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு மிருகங்கா ஒரு ஹோட்டலில் இருந்து அதிர்ச்சியடைந்து நடுங்கியபடி வெளியே வந்த சிலிர்க்க வைக்கும் தருணத்தை சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட போலீசார், உடனே விசாரணையைத் தொடங்கி குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், ராஜு அலி குற்றத்தைச் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், மிருகங்காவை இரண்டு ஆண்டுகளாக தெரியும் என்றும் ஆனால், அவரைக் கொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ராஜு அலிக்கும் நடிகர் மிருகங்காவுடன் இருந்த பெண்ணிற்கும் முன்னரே பழக்கம் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த கொலை முக்கோண காதல் விவகாரம் தொடர்பாக அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.