“ஹோட்டலுக்கு சென்ற காதல் ஜோடி”… தானாகவே கனெக்ட் ஆன Wi-Fi… காதலனுக்கு வந்த சந்தேகம்… பதில் சொல்ல முடியாத காதலி… Break-up-ல் முடிந்த இன்ப சுற்றுலா..!!!
SeithiSolai Tamil May 14, 2025 02:48 PM

சீனாவின் சோங்சிங் நகரத்திற்கு ஒரு காதல் பயணமாக சென்ற ஜோடிக்கு, ஹோட்டலில் செக்-இன் செய்யும் தருணம் தான் அவர்களது உறவின் முடிவாக மாறியது. இதில், ஹோட்டல் வைஃபை தானாகவே இணைந்தது என்பதே அதிர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

அதாவது லீ எனப்படும் அந்தப் பெண், ஹோட்டலில் செக்-இன் செய்யும்போது தனது ஐடியை காணவில்லை என்பதால், டிஜிட்டல் அடையாள ஆவணத்தை டவுன்லோட் செய்ய முயன்றார். அப்போது, அவரது மொபைல் தொலைபேசி, எந்தவிதமான கடவுச்சொல்லும் இல்லாமல், ஹோட்டல் வைஃபையை தானாகவே இணைத்துக்கொண்டது. இது அவரது காதலனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. “நீ இதற்கு முன் இந்த ஹோட்டலில் யாருடனாவது வந்திருக்க வேண்டுமே?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். லீ மறுத்தாலும், தொழில்நுட்ப விளக்கமின்றி பதிலளிக்க முடியாமல் தடுமாறினார்.

இந்த உண்மையை நிரூபிக்க முயன்ற லீ, பின்னர் நண்பர்களிடம் இதை பகிர்ந்தார். மேலும் சோங்சிங் நகரில் அவர் முன்பாக வேலை செய்த ஹோட்டல் ஒன்று, இதே வைஃபை ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் அதன் விவரங்களை சேமித்து வைத்திருப்பதால் புதிய ஹோட்டலிலும் தானாகவே இணையத்துடன் இணைந்திருக்கலாம் என்றும் தகவல் கிடைத்தது. ஆனால் இந்நேரத்தில், அவருடைய காதலன் ஏற்கனவே உறவை முறித்துவிட்டதால், அந்த விளக்கமும் பயனளிக்கவில்லை.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் “தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ளாத சந்தேகத்தால் ஒரு உறவு முறிந்துவிட்டது” என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.