பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார் இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லைப்பகுதியில் பதட்டங்கள் அதிகரித்தன. லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான எதிர்ப்பு முன்னணி பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது, ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக, இந்தியா இந்தியாவும் பாகிஸ்தானும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி நான்கு நாட்கள் தீவிர ஆயுத மோதலுக்கு உட்பட்டன. மே 10ம் தேதி இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டன. இதனையடுத்து தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயங்கரவாதம் குறித்து மட்டுமே இந்தியா பேச விரும்புகிறது என எஸ் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
"பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பயங்கரவாதம் தொடர்பானதாக மட்டுமே இருக்கும் என்றும், பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் உள்ளது என்றும், அவர்கள் பயங்கரவாத உள்கட்டமைப்பை மூட வேண்டும் என்றும் பிரதமர் மிகத் தெளிவாகக் கூறியதாக நான் நினைக்கிறேன்," எனக் கூறியிருந்தார். "அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியும். பயங்கரவாதம் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவைதான் சாத்தியமான பேச்சுவார்த்தைகள்." எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.