ருத்ரபிரயாக், கேதர்நாத்தில் புனித பயணம் மேற்கொள்வதற்காக பலர் சென்றிருந்தனர். அந்த குழுவில் திடீரென ஒருவருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு சிகிச்சையளித்து மீட்டு கொண்டு வருவதற்காக ரிஷிகேஷ் நகரில் இருந்து ஹெலி ஆம்புலன்ஸ் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது.
இந்த ஹெலி ஆம்புலன்சில் 2 மருத்துவர்கள், விமானி என 3 பேர் இருந்தனர். இந்நிலையில், திடீரென வழியில் அந்த ஹெலி ஆம்புலன்ஸ் வால் பகுதியில் உள்ள இறக்கை உடைந்து விட்டது.
இதனையடுத்து உடனடியாக கேதர்நாத் பகுதியிலேயே ஹெலி ஆம்புலன்ஸ் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால், 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ராகுல் சவுபே தெரிவித்துள்ளார். ஹெலி சேவைக்கான ஒருங்கிணைப்பு அலுவலராகவும் அவர் இருந்து வருகிறார்.