நீதான் என் காரை இப்படி பண்ணிட்ட… தன் தம்பியுடன் சண்டை போட்ட ரோகித் சர்மா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
SeithiSolai Tamil May 18, 2025 05:48 AM

மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) வாங்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் புதிய ஸ்டாண்ட் ஒன்றை வெள்ளிக்கிழமை விழாவாக திறந்து வைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கதாநாயகனாக விளங்கிய ரோஹித்தின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்த உணர்ச்சிவசப்படுத்தும் நிகழ்வில் ரோஹித் சர்மா தனது மனைவி ரிதிகா மற்றும் பெற்றோர்களுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ரோஹித்தின் இளைய சகோதரர் விஷாலும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் இருவருக்கிடையில் நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பெரிய சகோதரராக இருக்கும் ரோஹித், தனது காரில் ஏற்பட்ட கோளாறுக்கு இளைய சகோதரரையே காரணமாகக் கூறிகிறார். “நீ தான் காரை இப்படி பண்ணிட்ட” என அவர் சிரிப்புடன் சாடுவது காணொளியில் தெளிவாகக் கேட்கப்படுகிறது.

 

இந்த நகைச்சுவையான உரையாடல் வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்த விழாவிற்குப் பிறகு நடந்தது. சமூக வலைதளங்களில் இதற்கான வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “பெரிய அண்ணனின் டிபிக்கல் டயலாக்!” என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரோஹித் சர்மாவுக்கான கௌரவமும், அவரின் குடும்பத்துடன் காணப்படும் உணர்ச்சிபூர்வ தருணங்களும், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த வீடியோ, ஒரு சாதாரண குடும்பத்தோடு இணைந்த கிரிக்கெட் சூப்பர்ஸ்டாரின் மிருதுவான பிம்பத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.