%name%
மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அவ்வாறாக, பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கும் பாகிஸ்தான் அரசு என்பதை அவர்களே இந்த உலகுக்கு மற்றொரு முறை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த வாரத்தில் நம் இந்திய பிரதமர் ஆதம்பூர் சென்று அங்கு உள்ள நம் படைவீரர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். உடனே பாகிஸ்தான் பிரதமர் ஷப்பா ஷெரிப் இதே போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு தானும் அதுபோலவே கலந்து கொள்ள சென்றார். விமானத்தில் அல்ல, தரை மார்க்கமாக. காரணம் விமான ஓடுதளம் அவ்வளவுக்கு சேதமடைந்திருந்தது. என்னென்னமோ நினைத்துக் கொண்டு சென்றவர் எள்ளும் கொள்ளும் வெடிக்க திரும்பினார்.
அங்கு ஒரு மலைப் பகுதி இருக்கிறதாமே, அந்த மலைப்பகுதியில் மீண்டும் ற்றைய தினம் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சொல்கிறார்கள். ஏதோ ஒன்றின் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக இது இருக்கக்கூடும் என்கிறார்கள். சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது என மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு. ஆனால் இவையெல்லாம் கட்டுக் கதைகள் என்கிறார்கள் அவர்கள்.
நம் நாட்டிலோ, அப்படியா அந்த மலைப்பகுதியில் தான் ஒளித்து வைத்து இருக்கிறார்களா? ஐயோ பாவம் என முடித்துக்கொண்டனரே தவிர, மற்ற எந்த ஒரு கேள்விக்கும் வாயே திறக்கவில்லை.
பிரெஞ்சு தயாரிப்பு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக வந்த தகவல்களிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். நம் வசம் இன்றளவும் அந்த 36 விமானங்கள் பத்திரமாக இருக்கின்றன. அப்படி என்றால் சுடப்பட்ட விமானங்கள்? அது மிஃராஜ் 5 என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்! இதுவும் அதே பிரஞ்சு நிறுவன தயாரிப்பு தான், ஆனால் அது பாகிஸ்தான் பயன் படுத்தும் விமான ரகம். அப்படி என்றால்?
இதே ரகத்திலான மிராஜ் 2000 விமானங்கள் நம் இந்திய தரப்பிலும் பயன் படுத்தி வருகிறார்கள். கூடவே ஐக்கிய அரபு நாடுகளில், கட்டார் போன்றவற்றில் இருந்து பழைய விமானங்களை நம்மவர்கள் வாங்கி உதிரி பாகங்களுக்காக பயன் படுத்தி வருகிறார்கள். ஒரு வேளை இந்த விமானங்களில் ஏதேனும் ஒன்றை பாகிஸ்தான் மீது?! அதுவும் இல்லை.
ஏனெனில் பாகிஸ்தானிய மிஃராஜ் 5 ரகத்திலான விமானங்களின் ஏர்பேக் தனித்த ரகம். அதாவது அவசர கால பொறிமுறையாக விமானியோடும் விமானி இருக்கையோடும் வெளியே தூக்கி வீசப்படும் இவற்றில் உயிர் காக்கும் அவசர கால பாராசூட் இருக்கும். இது இளஞ்சிவப்பு மற்றும் கரும்பச்சை நிறத்தில் இருந்திருக்கின்றது. இது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மிஃராஜ் விமானங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்ட ரகம் என்பதை ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள்.
அப்படி என்றால், பாகிஸ்தான் தரப்பில் JF 17, F16 விமானங்களோடு இந்த மிஃராஜ் விமானங்களும் தாக்குதல் நடத்த ஆய்தமானதா என்றால் அதற்கு சரியான பதில் இல்லை.
இதில் F16 விமானங்கள் இரண்டு திசை தெரியாமல் பறக்க, அதாவது, திசை தெரியாமல் பறக்க, அவற்றை ஏதோ ஒன்று தாக்கியதில், ஒரு F16 விமானம் சேதமடைந்தது என்றனர். சீன தயாரிப்பு JF17 பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஆனால் மிஃராஜ் பற்றி எந்த ஓர் இடத்திலும் எந்த ஒரு தகவலும் இல்லை.
அவசர கால வெளியேற்றம் நடந்த விமானி இருக்கையைக் கண்டெடுத்து இருக்கிறார்களே தவிர விமானத்தின் கையளவு பாகங்கள் பற்றி எவரும் வாயே திறக்கவில்லை.
வானில் வைத்தே பாகிஸ்தானிய அவாகஸ் எனப் படும் ஏர்போர்ன் வார்னிங் சிஸ்டம் விமானத்தை நம் இந்திய தரப்பில் முற்றிலுமாக அழித்திருக்கிறார்கள். இது வானில் வைத்தா அல்லது தரையில் நிலை நிறுத்தி வைக்கப் பட்ட நிலையிலா என்பது குறித்து தகவல் இல்லை. இந்த விமானங்கள்தான் போர்க் காலத்தில் களத்தில் செயல்படும் கட்டளைத் தளம் என்பர். தவிர இதுவே மற்ற போர் விமானங்களின் ஒருங்கிணைக்கும் உயிர் நாடி என்பர். இதனை எட்டாம் தேதி இரவு இந்தியா தாக்கி இருக்கிறது.
சரி, அப்படி என்றால் மிஃராஜ்? இந்த மிஃராஜ் விமானங்களில் தான் அணு ஆயுத தாக்குதல் நடத்த கொண்டு செல்ல ஏதுவாக சிலவற்றை செய்து வைத்திருந்திருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். அந்த மலைப்பகுதியின் நுழைவு வாயிலை தாக்கியவர்கள், மலையையும் தாக்கி விட்டு விமான நிலைய ஓடுதளம் மற்றும் அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களையும் தாக்கி இருக்கக் கூடும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!
எப்படி இதைச் சொல்கிறார்கள் என்று பார்த்தால், முதல் நாள் இரவு அதாவது எட்டாம் தேதி தாக்குதல் நடந்த போது ஒரு அவாகஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். அடுத்த நாள் மதிய வேளையிலேயே பாகிஸ்தான் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்பது நாம் அறிந்ததே. அந்த சமயத்திலோ அல்லது அன்று இரவிலோ தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றோர் அவாகஸ் விமானத்தை பிரமோஸ் பயன்படுத்தி வீழ்த்தி இருக்கக்கூடும் என்கிறார்கள்.
சரி இது பற்றி பாகிஸ்தான் என்ன சொல்கிறது? அவர்கள் நிச்சயமாக பிரமோஸ் பயன்படுத்தியே தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தரையில் இருந்தா அல்லது விமானத்தில் இருந்தா என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என சொல்லி இருக்கிறார்கள்.
தலையில் அடித்துக் கொண்டு இருக்கிறது மேற்கு உலகம். அவர்கள் இதை ரசிக்கவில்லை. கூடவே பாகிஸ்தான் வான் பாதுகாப்பு மண்டலம் எந்த லட்சணத்தில் உள்ளது, என்பதை இப்படி பட்டவர்த்தனமாக உளறிக் கொட்டி இருக்கிறார்களே என்ற கவலை அவர்களுக்கு!
இதில் ஐரோப்பிய ஊடகம் ஒன்றில் மட்டுமே, ஏற்கெனவே இந்தியத் தரப்பில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை பாகிஸ்தானிய பகுதியில் தவறுதலாக அனுப்பிய சம்பவத்தை தொடர்பு படுத்தி பேசியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ஒன்று நிச்சயம். மலை தாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எனர்ஜி சிஸ்டம்ஸ் விமானம் ஒன்று விழுந்தடித்துக்கொண்டு பறந்து வந்திருக்கிறது. IMF நிதி கொடுத்து இருக்கிறார்கள். போரான் எனும் தனிமத்தை எடுத்துக் கொண்டு எகிப்திய விமானமும் வந்திருக்கிறது. இது அணுக் கசிவை தடுக்க பயன்படுகின்றன என்பதை கூடுதல் தகவல்களாக நினைவில் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக போர் நிறுத்தம் செய்ய கோரிக்கை வந்து உடனடியாக சரி என்று நம் இந்தியத் தரப்பில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம் இந்திய தரப்பில் இருந்து எந்த ஒரு தாக்குதலும் நடக்கவில்லை என நம் தரப்பில் சொல்லியும் இருக்கிறார்கள்.
அவ்வளவுதான் விஷயம்! ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சிந்து நதி நீர் கேட்டு கடிதம் எழுதி வருகிறார்கள். வாகா எல்லையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர். சமாதான உடன்பாடு ஏதேனும் செய்ய முடியுமா என பல அரபு நாடுகள் ஊடாக அலை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் நம் இந்திய தரப்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை என ஒன்று நடந்தால் அது, எங்கள் இந்திய நிலப்பரப்பில் இருந்து எப்போது பாகிஸ்தான் காலி செய்யப் போகிறது என்பது பற்றியதாக மட்டுமே இருக்கும் என கிலி ஏற்படுத்தி வைத்து இருக்கிறார். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
அவரளவில் ஆக்ரமிப்பு காஷ்மீர் எனச் சொல்லக்கூட அவர் தயாரில்லை எனத் தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கிறார். அது இந்திய நிலப்பரப்பு அவ்வளவே! அங்கிருப்பவர்கள் ஏற்கெனவே இந்தியப் பிரஜைகள் தான் என்கிறார் அவர்.
அப்படி என்றால், ஆதார பூர்வமாக, அதிகார பூர்வமாக அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கு எந்த ஒரு சான்று ஆவணங்களும் இதுவரை இல்லை. ஒரு வேளை இனி பாகிஸ்தான் வழங்க முற்பட்டால் ஏவுகணை பாயும் என்கிறார். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!
News First Appeared in