“பின்னால் இருந்து குத்தி கிழித்த டிரைவர்….” பேருந்தில் அலறிய கண்டக்டர்…. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil May 18, 2025 11:48 AM

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன் விரோதம் காரணமாக பேருந்து நடத்துனரை ஓட்டுனர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் பேருந்தில் வினோத் என்பவர் நடத்துனராகவும், திருவனந்தபுரத்தை சேர்ந்த பாபு ராஜ் என்பவர் ஓட்டுனராகவும் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இருந்த போது இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று வினோத் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பின்னால் இருந்து வந்த பாபு ராஜ் கத்தியால் வினோத்தை சரமாரியாக குத்தினார். இதனால் அலறி துடித்த வினோத் அவரை தடுக்க முயற்சி செய்தார்.

இருப்பினும் பாபு ராஜ் விடாமல் வினோத்தை தாக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் விலக்கி விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாபு ராஜை கைது செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.