BREAKING: முரண்டு பிடிக்கும் மத்திய அரசு…. கட்டாயம் வழக்கு தொடரப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
SeithiSolai Tamil May 18, 2025 07:48 AM

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய கல்வி கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது, எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது நமது திராவிட மாடல்.

இன்னார் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது பாஜகவின் காவி மாடல். கல்வியை காவிமயமாக்க பாஜக முயற்சி செய்கிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது என கூறியுள்ளார்.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாவிட்டால் அது எட்டா கனியாகி விடும். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் 2,152 கோடியை தராமல் மத்திய அரசு முரண்டு பிடிப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.