பகீர் வீடியோ... போதையில் பைக் ஓட்டிய கணவன்... பயத்தில் கீழே குதிக்கும் மனைவி!
Dinamaalai May 18, 2025 09:48 AM

போதையில் பைக் ஓட்டிய கணவனின் செய்கையைப் பார்த்து, பயத்தில் சட்டென கீழே குதித்த மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.  அதிலும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி  அந்த வீடியோவில் ஒருவர் குடி போதையில் பைக்கில் தன் மனைவி மற்றும் மகனுடன் செல்கிறார்.  திடீரென வாகனங்களுக்கு இடையில் செல்லும் போது அந்த பெண் பின்னால் இருந்து தடுமாறி கீழே குதித்து விட்டார். 

மனைவி  கீழே விழாமல் பேலன்ஸ் செய்து விட்டார். போதையில் இருந்த அந்த கணவன் தன் மனைவி கீழே இறங்கியது கூட தெரியாமல் மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். பின்னால் வந்தவர்கள் அவரை அழைத்தும் கவனிக்கவில்லை. பின்னர் ஒருவர் விரட்டி சென்று அவரின் கைகளை தொட்டு மனைவி கீழே இறங்கியதை கூறிய பிறகுதான் பைக்கை நிறுத்தி விசாரிக்கிறார்.   

அவர் குடி போதையில் இருந்த நிலையில் அவரால் மற்றவர்கள் சொன்னதை உணர முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வரும் நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தவறு எனவும் அந்த நபர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.  அவர் குடிபோதையில் குழந்தை மற்றும் பெண்ணுடன் பைக்கில் சென்ற நிலையில் ஏதாவது விபரீதமாக நடக்க வாய்ப்பு உள்ளதால்  கண்டிப்பாக இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை தேவை என்கின்றனர் நெட்டிசன்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.