அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா வில் பிரபல ராப் பாடகியான கிறிஸ்லி செலஸ் தனது தோழியுடன் உபர் புக் செய்து காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் கிறிஸ்லி செலஸ் அந்தப் பக்கமாக காரை ஓட்டுங்கள் என கூறியபோது ஓட்டுநர் நீங்கள் எனக்கு சொல்ல வேண்டியதில்லை.
என்னிடம் ஜிபிஎஸ் இருக்கு என கோபமாக பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண் ஓட்டுனர் “இப்போது என் வாகனத்தை விட்டு இறங்கு. நீ இனிமேல் இதில் பயணம் செய்யத் தேவையில்லை. உடனே கீழே இறங்கு” என சத்தம் போட்டுக் கொண்டே ஒரு நம்பருக்கு கால் செய்துள்ளார்.
View this post on Instagram
பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கிறிஸ்லி செலஸ் மற்றும் அவரது தோழியை நோக்கி காட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் இருவரும் காரை விட்டு இறங்கினர். இதனை வீடியோவாக பதிவு செய்த கிறிஸ்லி செலஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோ அடிப்படையில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு உபர் நிறுவனம் கூறியதாவது, இது கவலைக்குரியது. இவ்வாறு நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஓட்டுநர்கள் துப்பாக்கிகளை எடுத்து செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டுனரை தளத்தில் இருந்து நீக்கி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம் என கூறியுள்ளனர்.