நடிகர் சேரன் நரி வேட்டை திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்த படம் வருகிற 23-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சேரன் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சேரன் இயக்கத்தில் கடந்த 24-ஆம் ஆண்டு ரிலீசான ஆட்டோகிராப் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த படம் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் நரி வேட்டை திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரனிடம் ஆட்டோகிராப் திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது சேரன் கூறியதாவது, ஆட்டோகிராப் படம் 2 மணி நேரம் 50 நிமிடம் இருந்தது. அதில் இப்போது 20 நிமிடத்தை நானே கட் பண்ணி விட்டேன். எனக்கே இன்றைக்கு பார்த்து இது கிரின்ஜ், இது பூமர் அப்படியெல்லாம் தோணும்.
ரியாலிட்டிய நாம எடுத்துக்கணும். ஏனென்றால் அன்றைக்கு டேஸ்டுக்கு அது தெரியாது. ஆனா இன்னைக்கு எனக்கே என்னை பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணி இருக்கோம்னு தோணுது. எதெல்லாம் வேண்டாமோ அதெல்லாம் கட் பண்ணிட்டேன். 2004 ஆம் ஆண்டு நம்ம கேட்ட சவுண்டு ரொம்ப பழசா தெரியும். இதனால ஆட்டோகிராப் ரீ ரெக்கார்டிங்கில் மொத்த சவுண்ட் செட்டப்பையும் நான் ரிவர்க் பண்ணி இருக்கேன் என கூறியுள்ளார்.