போர் நிறுத்தம் செய்யப்பட்டதும் ஏப்ரல் ம் தேதி .23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.பூர்ணம் குமார் ஷா ஏப்ரல் 23, 2025 அன்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸால் கைது செய்யப்பட்டார். இவரை எப்போது விடுதலை செய்வார்கள் என அவருடைய குடும்பத்தினர் காத்துகொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்கு திருப்தி கொடுக்கும் வகையில் மே 14ம் தேதி காலை 10.30 மணிக்கு அமிர்தசரஸில் உள்ள அட்டாரி சோதனைச் சாவடி வழியாக இந்தியாவிடம் அவரை ஒப்படைத்துள்ளனர். இந்திய அரசு, அவரது உடல்நிலை மற்றும் மனநிலையை பரிசோதித்து மருத்துவக் குழுவையும் அமைத்திருந்தது.
தற்போது வீட்டில் பூர்ணம் குமார் ஷா ஓய்வெடுத்து வருகிறார். அவருடைய மனைவி ரஜனி ஊடகம் தன்னுடைய கணவரை விசாரணை செய்து 21 நாட்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் சித்திரவதை செய்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ” பாகிஸ்தானில் 21 நாட்கள் என் கணவரைத் தடுத்து வைத்திருந்தபோது, பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் அவரை விசாரித்து, தூங்க விடாமல் துன்புறுத்தினர். பஞ்சாப் எல்லையில் பிஎஸ்எஃப் அதிகாரிகள், வீரர்களின் பணி நியமனங்கள் குறித்து கடுமையாக விசாரித்துள்ளனர்.
17 ஆண்டுகளாக என் கணவர் பிஎஸ்எஃப்-ல் பணிபுரிந்து வருகிறார், இனியும் தொடருவார். விரைவில் அவர் பணிக்குத் திரும்புவார் என நம்புகிறேன். உடல்ரீதியாக துன்புறுத்தப்படவில்லை, ஆனால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரை உளவாளி என சந்தேகித்து 3 முறை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி விசாரித்து உணவு கொடுத்தார்கள், ஆனால் பல் துலக்க அனுமதிக்கவில்லை. இந்தியா திரும்பியபோது அவர் மிகவும் சோர்வாக இருந்தார்” எனவும் பூர்ணம் குமார் ஷா ரஜனி வேதனையுடன் பேசியுள்ளார்.
21 நாட்கள் அவர தூங்கவிடல... பாகிஸ்தான் ராணுவம் பூர்ணம் குமாரை சித்திரவதை... மனைவி கதறல்!
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின் எல்லைகளுக்கு இடையே கொஞ்சம் குறைந்துள்ளது என சொல்லலாம். பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பதட்டம் முழுவதுமாக குறையவில்லை என சொல்லலாம்.