ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 13 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா… புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil May 18, 2025 01:48 AM

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மொத்தம் 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்த இந்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்று பெயரில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.

இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முகேஷ் கோயல் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநகராட்சியில் அவை தலைவராக அவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.