தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், படுத்துக்கொண்டே எப்படி 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும். முதலில் அவருடைய பிரச்சனைகளை அவர் தீர்க்க வேண்டும். அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்கட்டும். அவர் பிரச்சினைகளை தீர்த்த பிறகு வெற்றி தோல்வி குறித்த கருத்து சொல்லட்டும்.
அவர்கள் குடும்பத்தினருக்குள்ளையே குத்துவெட்டு என பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்கள் 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும். மக்கள் மீது நாட்டம் இல்லாதவர்கள் மற்றும் மக்கள் மீது கவலை இல்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள். மக்களை தேடி செல்பவர்கள் மட்டும்தான் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியும். அவர்கள்தான் உண்மையான மக்கள் சேவகர்கள். மேலும் அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று கூறினார்.