மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், பருத்தி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து தரை வழியாக இந்தியாவிற்கு பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது.
அதே சமயம் கொல்கத்தா, மும்பை துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம் என அறிவித்தது. கடந்த மாதம் சில இந்திய பொருட்களுக்கு வங்கதேசம் தடை விதித்த நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.