உங்க குடும்பத்தில் வெட்டு குத்து பிரச்சனைகளை சரி பண்ணுங்க.... அப்புறம் வெற்றி தோல்வி பற்றி பேசலாம்... அமைச்சர் சேகர்பாபு ராமதாசுக்கு ஷொட்டு!
Dinamaalai May 18, 2025 11:48 PM

 

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இவர்  செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாசை சாடியுள்ளார்.  அவரிடம் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சேகர்பாபு படுத்துக்கொண்டே எப்படி 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும். முதலில் அவருடைய பிரச்சனைகளை அவர் தீர்க்க வேண்டும்.

அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்கட்டும். அவர் பிரச்சினைகளை தீர்த்த பிறகு வெற்றி தோல்வி குறித்த கருத்து சொல்லட்டும்.அவர்கள் குடும்பத்தினரிடையே வெட்டுக்குத்து  பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்கள் 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும்.

மக்கள் மீது நாட்டம் இல்லாதவர்கள் மற்றும் மக்கள் மீது கவலை இல்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள். மக்களை தேடி செல்பவர்கள் மட்டும்தான் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியும். அவர்கள்தான் உண்மையான மக்கள் சேவகர்கள்.  அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது எனக் கூறிவிட்டார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.