பாஜக நிர்வாகி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... போக்சோ வழக்குப்பதிவு!
Dinamaalai May 19, 2025 01:48 AM

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதியில் 15 வயது  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருபவர் நீலகண்டன் .

இவர்  2023 ம் ஆண்டு குடும்ப நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்றபோது நீலகண்டன் அவருடைய 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அவர்கள் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. 

சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது நீலகண்டன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.  அந்த உத்தரவின் படி  அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.