தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக வாலிபரை போலீசார் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் உத்தரவின் பேரில் மாநகா் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இத்தனிப்படை போலீசார், சத்யா நகா் பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் தட்சிணாமூா்த்தி(25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைதுக் செய்த போலீசார், ஒரு கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.