தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார். இதுகுறித்து தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து அவர் கூறியதாவது,
பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தான். அவர் இன்னும் கூட்டணி கிடையாது என அறிவிக்கவில்லை. பிறர் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பாஜகவுடன் விஜய் கூட்டணி இல்லை என அறிவித்தால் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் திகழ வேண்டும் என்று கூறினார்.