“தோனிக்கு மட்டும் தான் உண்மையாகவே ரசிகர்கள் இருக்காங்க”… மத்தவங்க காசு கொடுத்துதான் வச்சிருக்காங்க… ஹர்பஜன்சிங் சர்ச்சை கருத்து..!!!
SeithiSolai Tamil May 19, 2025 03:48 PM

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரது விளையாட்டை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மைதானங்களில் படையெடுத்து வருவர். இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சமீபத்தில் ரசிகர்கள் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, தோனி அவரால் முடிந்தவரை விளையாடுவார். அவர் எனது அணியாக இருந்தால் நான் வேறு முடிவை எடுத்து இருப்பேன்.

அவருக்கென உண்மையான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த ரசிகர்களுக்காக அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். உண்மையான ரசிகர்களை கொண்டுள்ளவர் தோனி. மீதமுள்ளவர்கள் அனைவரும் சமூக வலைதளத்தை சார்ந்துள்ளவர்கள். ஒரு சிலர் காசு கொடுத்து ரசிகர்களை வைத்துள்ளார்கள்.

அதனை விட்டு விடுங்கள் ஏனென்றால் நாம் அது குறித்து பேச தொடங்கினால் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். அந்த விவாதம் வேறு திசையில் கூட செல்லலாம் என கூறியுள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.