12-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்… கடன் சுமை காரணமாக ஜவுளி கடையில் வேலை பார்த்த மாணவி…. உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்…!!!
SeithiSolai Tamil May 19, 2025 04:48 PM

ராமநாதபுரத்தில் ஷோபனா என்ற மாணவி வசித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக மாணவி ஷோபனா அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவியது.

இந்நிலையில் மாணவியின் கதையை சமூக வலைத்தளம் மூலம் அறிந்து கொண்ட நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சோபனாவை சென்னைக்கு வரவழைத்தார். அங்கு கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக மாணவி உயர் கல்வி தொடரவும், அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகுவதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஏற்பாடு செய்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.