தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். அதாவது அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்த விஜய் கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ளார். ஆனால் பாஜகவினர் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஒரு அணியில் திரள வேண்டும் என்பதால் விஜய் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்டபோது கட்சியின் தலைவர் விஜய் தான்.
அவர்தான் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக கட்சியின் எம்.பி துரை வைகோ பேசினார். அவர் பாஜக மதவாத கட்சி என விஜய் கூறியுள்ளார். எனவே பாஜகவுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார் என நாங்கள் நம்புகிறோம் என்றார். மேலும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என ஏற்கனவே விஜய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.