Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
அடிபட்ட கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் நடந்த விஷயங்களை கூறிக் கொண்டிருக்கிறார். இந்த டிரைவர் சொன்னது போல காரில் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் எனக்கு அடிபட்டது.
இதை நான் அருண் சாரிடம் சொன்னபோது அவர் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என தன்னிடம் கூறியதாக அவர் கூறுகிறார். இன்ஸ்பெக்டர் கோவமாக இதைக் கேட்டு அருணிடம் சத்தம் போடுகிறார். உனக்காக பேச போய் என்ன ஆச்சு என அவரிடம் கத்திவிட்டு முத்துவை விட்டு அவர் லைசன்ஸ் கேன்சலையும் கேன்சல் செய்ய சொல்லி விடுகிறார்.
முத்து அடிபட்ட கான்ஸ்டபிளிடம் நன்றி கூற அவர் உன்னோட நன்றிய உன் மனைவிக்கு சொல். தனக்கொரு கஷ்டம் இருந்த போதும் அவங்க இன்னொரு பொண்ணு கஷ்டத்தில இருக்கப்ப உடனே உதவி செஞ்சாங்க என்கிறார். பின்னர் கார் சாவியை வாங்கி கொண்டு வெளியில் வருகிறார்.
முத்து கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்க அவரை சமாதானப்படுத்துகிறார். மீனாவிடம் தன்னுடன் வரச்சொல்ல அவர் பைக் இருப்பதாக சொல்லி விடுகிறார். அதை செல்வத்திடம் எடுத்து வரச்சொல்லலாம் என முத்துவுடன் காரில் செல்கிறார்.
இருவரும் பேசிக்கொண்டு வர முத்து அவர் நீ உதவி செஞ்சத சொன்ன போது கண்ணீர் வந்துவிட்டதாக சொல்கிறார். இருவரும் பின்னர் ரொமான்ஸ் செய்து பேசிக்கொண்டே வீட்டுக்கு வருகிறார். சந்தோஷமாக வீட்டுக்குள் வரும் முத்து அண்ணாமலையிடம் லைசன்ஸ் பிரச்னை சரியாகி விட்டதாக சொல்கிறார்.
பின்னர் என் காரின் பிரேக்கை கட் செய்ய நம்ம வீட்டில் இருந்து தான் சாவி போய் இருக்கணும். வெளியில் என்னிடம் சாவி கையிலே இருக்கும். விபத்து நடந்த நாளுக்கு முன் இரவு கூட பிரேக் பிடிச்சிது. அன்னைக்கு நைட் தான் என்னமோ நடந்து இருக்கு என்கிறார்.
முத்து, ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் இதை செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. ஆமாங்க அவங்க நம்ம நல்லா இருக்கணும் தானே நினைக்கிறாங்க என்கிறார். விஜயாவை பார்க்க எனக்கு இவனை பிடிக்காது. ஆனா பெத்த பிள்ளையை வயரை அறுத்து கொலை செய்ற அளவு போகலை என்கிறார்.
முத்துவும் நீங்க எப்பவும் அந்த லெவலுக்கு போக மாட்டீங்க என்கிறார். மனோஜை பார்க்க ரவி இவன் நம்ம அண்ணன்டா என்க இவனுக்கு அவ்வளோ தைரியம் இல்லை என முத்து கூறுகிறார். பின்னர் ரோகிணி என்ன சந்தேகப்படுறாரா உங்க வீட்டுக்காரர் எனக் கேட்கிறார்.
மீனா அவர் எதுவுமே சொல்லலையே என்க ரோகிணி எனக்கே ஆயிரம் பிரச்னை எனக் கூறுகிறார். விஜயா உனக்கு என்ன பிரச்னை. உன்னை நம்பி எனக்கு தான் பிரச்னை என்கிறார். பாருங்க இப்படி டெய்லி திட்டு வாங்குறேன். நான் ஏன் ஆணியில் இருந்த சாவியை எடுக்க போறேன் எனக் கூற நான் அங்க தான் சாவி வச்சேனு சொல்லலையே என்கிறார் முத்து.