அமெரிக்கா விசா மறுப்பு… நேர்காணலில் நேர்மையாக பதில் அளித்ததால் நொறுங்கிய கனவு…!!!
SeithiSolai Tamil May 19, 2025 08:48 PM

உலகளவில், அமெரிக்கா மாணவர் விசா பெறுவது ஒரு பெருமைக்குரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளம் மாணவருக்கு அந்த கனவு ஒரு நேர்மையான பதிலால் சிதைந்துவிட்டது. அமெரிக்காவின் City University of New York (CUNY) அமைந்துள்ள Baruch College-ல் Finance துறையில் Master’s படிப்புக்கு சேர்ந்திருந்த மாணவர், நியூடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசா நேர்முகத் தேர்வுக்கு சென்றார்.

I-20 ஆவணம், சுமார் $58,500 கடன், அதே அளவிலான சேமிப்பு மற்றும் சிறந்த கல்விப் பின்னணி இருந்தபோதும், அவரால் விசா பெற முடியவில்லை. விசாரணையின் போது, “இந்தக் கல்லூரியை எப்படி தெரிந்துக் கொண்டீர்கள்?” என்ற கேள்விக்கு மாணவர், “3 ஆண்டு பட்டப்படிப்பு ஏற்கும் பல்கலைக்கழகங்களை தேடி, லிங்க்ட்இனில் வரும் விமர்சனங்களை பார்த்து தேர்ந்தெடுத்தேன்” என நேர்மையாக பதிலளித்துள்ளார்.

ஆனால் இது, தூதரக அதிகாரியின் பார்வையில், கல்வி, தொழில் இலக்குகள் மற்றும் திட்டங்களை பற்றிய ஆழமான ஆர்வத்தைக் காட்டவில்லை. அதனால் விசா நிராகரிக்கப்பட்டது. இந்த அனுபவத்தை அவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான பார்வையாளர்கள் பெரும்பாலோர், அமெரிக்கா மாணவர் விசா நேர்முகத்தில் அளிக்கப்படும் பதில்கள், கோர்ஸ், பல்கலைக்கழகம் மற்றும் எதிர்கால இலக்குகளுடன் இணைந்து இருக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம், பல இந்திய மாணவர்களுக்கு ஒரு முக்கிய பாடமாக விளங்குகிறது. விசா நேர்முகத் தேர்வில் பதில்கள் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், அது ஒரே நேரத்தில் திட்டமிட்டது, தொழில் நோக்கமுடையது, பல்கலைக்கழகம் மற்றும் பாடத்திட்டம் குறித்த ஆர்வத்தையும் வெளிக்கொணர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.