மாணவர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளிகள் திறந்த பிறகு புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு.!!
SeithiSolai Tamil May 19, 2025 08:48 PM

கேரளாவில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு முதல் 2 வாரங்களுக்கு புத்தகம் எதுவும் மாணவர்கள் எடுத்து வர வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரளா அரசு கூறியதாவது, பள்ளிகள் திறந்து பிறகு முதல் 2 வாரத்திற்கு சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி போதைப்பொருள் துஷ்பிரயோகம், பொது சொத்துக்களை அளித்தல் மற்றும் உணர்ச்சியை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.