இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ ஒரு யானையின புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அதாவது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு யானை கரும்பு ஏற்றிக்கொண்டுவரும் லாரிகளை மட்டும் நிறுத்துகிறது. இந்த லாரி நின்ற பிறகு அமைதியாக அதிலிருந்து ஒரு சில கரும்புகளை எடுத்த பிறகு மீண்டும் வழி விடுகிறது. இதேபோன்று மற்றொரு லாரியையும் நிறுத்திய நிலையில் அதிலிருந்து சில கரும்புகளை எடுத்த பிறகு அந்த லாரிக்கு வழி விடுகிறது.
இந்த யானை பிற வாகனங்களை நிறுத்தாத நிலையில் கரும்பு லாரிகளை மட்டும் நிறுத்தியதோடு சில கரும்புகளை எடுத்துவிட்டு மீண்டும் அவைகளை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வர நிலையில் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு அந்த யானையின் புத்திசாலிதனத்தையும் பாராட்டுகிறார்கள். மேலும் சிலர் இதுதான் வனவெளி சுங்கச்சாவடி, அந்த யானை ஒரு பொறுப்புள்ள போலீஸ்காரர் போல நடந்து கொள்கிறது என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.