மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெதுல் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுல் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.8 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்த திடீர் நிலஅதிர்வால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மே 20ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்கு வங்கக் கடலில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது