இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட காரணத்தினால் ஐ.பி.எல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஐ.பி.எல் 2025 ப்ளே ஆஃப்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்களை கடந்த திங்களன்று பி.சி.சி.ஐ தெரிவித்தது. அதில் நடப்பு தொடரின் இறுதிப்போட்டி மற்றும் இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தையும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த உள்ளது என தெரிவித்தது.
அதே சமயத்தில் குவாலிபயர் 1 ஆட்டத்தையும் மற்றும் எலிமினேட்டர் போட்டியையும் சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.