“நம்பர் 12″… அந்த தேதியில் தான் எனக்கு அழைப்பு வந்தது… அதான் அந்த நம்பரையே… ஜெர்சி சீக்ரெட்டை பகிர்ந்த சிஎஸ்கே வீரர் பிரெவிஸ்…!!
SeithiSolai Tamil May 22, 2025 03:48 AM

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் இல் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. முன்னதாக நடப்பு சீசனில் சென்னை அணியில் இடம் பெற்று இருந்த குர்ஜப்னித் சிங் காயம் காரணமாக விலகினார்.

அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய பிரெவிஸ் சென்னை அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சென்னை அணியில் பிரெவிஸ் 12ம் நம்பர் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடி வருகிறார்.

அவரது ஜெர்சி நம்பருக்கான சுவாரஸ்யமான தகவலை சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தெரிவித்ததாவது, “ஏப்ரல் 12ஆம் தேதி தான் எனக்கு சென்னை அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக சிஎஸ்கேவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதனால்தான் 12ஆம் நம்பரை தனது ஜெர்சி நம்பராக வைத்துள்ளேன்” என தெரிவித்தார்.

இது குறித்த வீடியோவையும் சிஎஸ்கே நிர்வாகம் தங்களது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பொதுவாக பிரெவிஸ் அனைத்து போட்டிகளிலும் 17ஆம் நம்பர் கொண்ட ஜெர்ஸியை அணிவது வழக்கம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.