சமீப காலமாக, சில சர்ச்சைக்குரிய செயல்களை செய்து, ஆளும் கட்சியின் ஆதரவால் தப்பித்து வருகிற யூடியூபர் ஒருவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், தமிழகத்திலேயே அதிக ஃபாலோயர்களை வைத்து கொண்டு பொது பிரச்சனைகளை அலசி வீடியோக்களை வெளியிட்டு வருகிற நபர் ஒருவரையும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபர்கள் தங்கள் வருமானத்திற்காக எல்லை மீறி சில செய்திகளை வெளியிட்டு வருகிற சூழ்நிலையில், இனிமேல் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, யூடியூபர்களை கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.