இந்தியாவின் வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் மனதில் பீதியை கிளப்பி வருகிறது. அந்த வகையில் நேற்று மே 21ம் தேதி லடாக்கில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரவு 11.46 மணிக்கு 3.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.54 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலும், 78.38 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.