ஹாலிவுட்டில் வெளியான, ஏர்பிளேன் 2, நோ ஸ்மால் அஃபைர், பிளட்ச், த லிட்டில் ரஸ்கல்ஸ், மேன் ஆஃப் த ஹவுஸ், ஸ்பைஸ் வேர்ல்டு, சாண்டி வெக்ஸியர் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஜார்ஜ் வெண்ட். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். என்பிசி தொலைக்காட்சியில் வெளியான ‘சீயர்ஸ்’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஜார்ஜ் வெண்ட், நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 76. தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகர் ஜார்ஜ் வெண்ட்டின் மனைவி பெர்ன டெட் பிர்கெட் ஹாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.