இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது சினிமா தயாரிப்பாளரான சமீர் அலிகான் மோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற படத்திற்கு இசையமைப்பதற்காக சாம் சி எஸ்-க்கு ரூ.25 லட்சம் முன் பணம் ஆக கொடுத்தேன்.
ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த படம் பாதியில் நின்றது. தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. ஆனால் அப்படத்திற்கு இசையமைக்காமலும், கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமலும் சாம் ஏமாற்றி வருவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடர்பாக சாம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற படத்திற்கு இசையமைப்பதற்காக தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்னுடன் ஒப்பதம் செய்தார்.
சில ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்த அவர் திடீரென முழு படத்தையும் முடித்து விட்டதாக கூறி இசையமைக்க கூறினார். ஆனால் முன்பு ஒப்பந்தம் செய்த படங்களின் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் காலதாமதம் ஆகும் என்று கூறினேன்.
காத்திருப்பதாக கூறிவிட்டு காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். அப்போதே காவல்துறையினரிடம் உரிய ஆதாரங்களுடன் விளக்கத்தை அளித்தேன். அதன் பின்ன அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். பேச்சுவார்த்தை நடந்தது, வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுக்க நினைத்தேன் யோசித்து சொல்வதாக அவர் கூறினார்.
இப்போது திடீரென மீண்டும் என் மீது புகார் அளித்துள்ளார். அவர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான வழியில் என்னிடம் இருந்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார். இதுவரை புகார் குறித்து காவல் நிலையத்திலிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.