கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யாஷ். இவர் “கேஜிஎப்” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது “டாக்சிக்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டில் “ராமாயணம்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய தாய் புஷ்பா அருண்குமார் தயாரிப்பில் “கொத்தலாவடி” என்ற திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது யாஷின் தாய் புஷ்பா அருண்குமாரிடம் நடிகர் யாஷ் படத்தை தயாரிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு தயாரிப்பாளர் புஷ்பா சற்றும் யோசிக்காமல் ”இல்லை” என்று பதில் அளித்தார். அவருக்கு ஏற்கனவே தேவையான புகழும், பணமும் கிடைத்து விட்டது. எனவே அவரை வைத்து நான் படம் இயக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவு வைத்திருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது முறையானது அல்ல என்பதால், நான் மற்றவர்களை வைத்து படங்களை தயாரிப்பேன் என்று வெளிப்படையாக கூறினார்.