பொதுமக்களே உஷார்... யுபிஐ பணமோசடியை தடுக்க புதிய நடைமுறை!
Dinamaalai May 22, 2025 10:48 PM

இந்திய மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது . இதில், கூகுள் பே, போன் பே, பேடிஎம்., செயலிகளை அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளில் மோசடியைத் தடுக்க ஜூன் 30ம் தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. யுபிஐ பணப் பரிவர்த்தனைகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி பணத்தைப் பெறுபவர், 

தன் பெயரை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும். புதிய நடைமுறைப்படி பணத்தை பெறுபவரின் பெயர், அவருடைய வங்கிக் கணக்கில் எப்படி உள்ளதோ அதையே காட்டும். இதன்மூலம் சரியான நபருக்குத்தான் பணத்தை அனுப்பியுள்ளோம் என்பதை நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.