ரெட்ரோ பட ஷூட்டிங்கின் போது தேம்பி தேம்பி அழுத சூர்யா… என்ன காரணமா இருக்கும்…?
Tamil Minutes May 23, 2025 03:48 AM

சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர் கார்த்திக் மற்றும் இவரது மனைவி ஜோதிகா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சூர்யா.

இவரை மேலும் பிரபலமாக்கியது சிங்கம் பட தொடராகும். சிங்கம் ஒன்று இரண்டு மூன்று என்ற மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. 2015 காலகட்டத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் பெரிதாக வணீக ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இறுதியாக இவர் நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை பெற்றது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Retro திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. இதில் Retro திரைப்படம் முடிவடைந்து ரிலீஸானது. ஆனால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லை.

இந்நிலையில் சூர்யாவை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் சூர்யா குடும்பத்துடன் மிகவும் இணைப்பாக இருக்கக்கூடியவராம். அவரது தங்கை பிருந்தா மீது அலாதி பிரியம் கொண்டவராம் சூர்யா. என்ன தான் பிருந்தாவுக்கு கல்லூரி செல்லும் வயதில் குழந்தை இருந்தாலும் பிருந்தாவை ஒரு குழந்தை போல தான் பார்த்துக் கொள்வாராம் சூர்யா. அது மட்டும் இல்லாமல் தனது மனைவி குழந்தைகளிடமும் மிகுந்த பாசப்பிணைப்போடுசூர்யா இருப்பாராம். சூர்யாவின் மகள் தியா மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறாராம். அந்த நிலையில் ரெட்ரோ சூட்டிங்கில் இருந்த போது தனது மகள் தியா அமெரிக்கா செல்ல வேண்டிய ஒப்புதல் கடிதம் வந்துவிட்டது என்று மெசேஜ் வந்த உடனேயே சூட்டிங் ஸ்பாட்டிலேயே தேம்பித் தேம்பி அழுதாரம் சூர்யா. அந்த அளவுக்கு குடும்பம் மனைவி குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டவர் சூர்யா என்பது இதிலிருந்து தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.