இந்தியாவின் தலைசிறந்த மனிதரின் பயோபிக்கில் நடிக்க போகும் தனுஷ்… இது லிஸ்ட்லயே இல்லையே…
Tamil Minutes May 23, 2025 03:48 AM

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இளையராஜா அவர்களின் பயோபிக்கில் நடிக்க உள்ளார் விரைவில் சூட்டிங் தொடங்கும் என்ற தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவரான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் ஆதி புரூஸ் படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.