பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது என பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உட்பட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். 3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது. பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார்.