Cannes Queen” என அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராய், நேற்று கேன்ஸ் திருவிழாவின் சிவப்பு கார்ப்பெட்டில் வெள்ளை நிற ஆடம்பர புடவையில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், அவரது தோற்றத்தில் அதிக கவனம் பெற்றது அவரது தலையில் பிரகாசமாக தெரிந்த சிந்தூர் தான்.
ஐஸ்வர்யாவின் இந்த கேன்ஸ் தோற்றம் மீது ரசிகர்கள் ரசனையோடு கருத்து தெரிவித்துள்ள நிலையில், சினிமா பிரபலங்களும் அவரின் பாரம்பரிய தோற்றத்திற்கு அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அனுஷ்கா சர்மா, பூமி பேட்நேகர், வாணி கபூர், நீல் நிதின் முகேஷ், மசாபா குப்தா, சோஃபி சௌத்ரி, நிகிதா தத்தா ஹிமான்ஷி குரானா, குஷா கபிலா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், ஐஸ்வர்யாவின் சிந்தூருடன் கூடிய புகைப்படங்களுக்கு ‘love’ ரியாக் கொடுத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரிச்சா சதா இதற்கு மேலும் எதுவும் தேவையில்லை என்றபடி, “Queen” என்றே அழைத்து புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் கேன்ஸில் சிந்தூருடன் தோன்றியது ரசிகர்களுக்குள் இரண்டு முக்கியமான விவாதங்களை உருவாக்கியது. சில சமூக வலைதள பயனர்கள், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இடையே பிரச்சனை இருப்பதாக வந்த வதந்திகளுக்கு உறுதியான பதிலாகவே இது இருக்கலாம் என கூறினார்கள்.
மற்றொரு பகுதி நெட்டிசன்கள், ஐஸ்வர்யாவின் சிந்தூர் தோற்றத்தை இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலுக்கு ஆதரவை வகையில் இருப்பதாக கூறினர். மே 7 முதல் 8 வரை நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, ஜம்மு-காஷ்மீர் பகுதி மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை நோக்கி நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னர், ஐஸ்வர்யா ராய் பாரம்பரிய ஆடையில் சிவப்பு சிந்தூருடன் கேன்ஸில் தோன்றியது, பலரால் நாட்டுப்பற்றை உணர்த்தும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.
தொழில்நுட்ப ரீதியில், ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் II’ படத்தில் நந்தினியாக நடித்திருந்தார். தற்போது புதிய திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அபிஷேக் பச்சன் அண்மையில் Amazon Prime இல் வெளியான Be Happy படத்தில் நடித்திருந்தார். அவர் அடுத்து Housefull 5 மற்றும் Raja Shivaji திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.