%name%
ஐ.பி.எல் 2025 – சென்னை vs ராஜஸ்தான் – டெல்லி – 20.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (187/8, ஆஅயுஷ் மஹத்ரே 43, டிவால்ட் பிருவிஸ் 42, ஷிவம் துபே 39, தோனி 16, யுத்வீர் சிங் 3/47, ஆகாஷ் மத்வால் 3/29, துஷார் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா தலா ஒரு விக்கட்), ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (17.1 ஓவர்களில் 188/4, வைபவ் சூர்யவன்ஷி 57, சஞ்சு சாம்சன் 41, ஜெய்ஸ்வால் 36, துருவ் ஜுரல் ஆட்டமிழக்காமல் 31, ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்கமல் 12, அஷ்வின் 2/41, அன்சுல் காம்போஜ் 1/21, நூர் அகமது 1/42) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மஹத்ரே (20 பந்துகளில் 43 ரன், 8 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டேவன் கான்வே (8 பந்துகளில் 10 ரன், 2 ஃபோர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய உர்வில் படேல் (பூஜ்யம் ரன்) இந்த ஆட்டத்திலும் சரியாக ஆடவில்லை.
அவருக்குப் பின் ஆட வந்த அஷ்வின் (8 பந்துகளில் 13 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) சுமாராக ஆடினார். அவர் ஏன் இவ்வளவு முன்னதாகக் களமிறக்கப்பட்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. அவருக்குப் பின்னர் வந்த ரவீந்தர் ஜதேஜா (1 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை. ஆனால் டிவால்ட் ப்ருயிஸ் (25 பந்துகளில் 42 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.
பின்னர் ஆட வந்த ஷிவம் துபே (32 பந்துகளில் 39 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), எம்.எஸ். தோனி (17 பந்துகளில் 16 ரன், 1 சிக்சர்)ஆகியோர் வேகமாக ரன் அடிக்க முடியவில்லை அதனால சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்த்து.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (19 பந்துகளில் 36 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (33 பந்துகளில் 57 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (31 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), அவருக்குப் பின் வந்த ரியன் பராக் (3 ரன்), துருவ் ஜுரல் (12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் (5 பந்துகளில் 12 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ஆடினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 188 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி புள்ளைப்பட்டியலில் ஏழாவது இடத்தையும் சன்ரைசர்ஸ் அணி எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளன். நாளை மிக முக்கியமான மும்பை டெல்லி ஆட்டம் நடைபெறவுள்ளது.
News First Appeared in