திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
1. வீடுகளில் சூரியஒளி மேற்கூரை மின்சக்தி திட்டம் அமைத்து சூரிய மின்சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கலம் மூலம் சேமித்து மின்தடை காலங்கள் மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி இல்லாத நேரங்களில் பயன்படுத்தி மின்கட்டணத்தை சேமிக்கலாம்.
2. 1 கிலோ வாட் சூரியஒளி மின்சக்தி திட்டத்தில் ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தியாவதால் மின் சேமிப்பு ஏற்படும்.
3. 1 கிலோ வாட் வீடு மேற்கூரை சூரிய ஒளி மின்சார திட்டம் அமைப்பதற்கு மானியம் தொகை ரூபாய். 30,000/- மின் சக்தி திட்ட பணிகள் முடிவுற்ற 7 தினங்களிலிருந்து 30 நாட்களுக்குள் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
4. 2 கிலோ வாட் .சூரிய ஒளிசக்தி மேற்கூரை மின்சார உபகரணங்கள் நிறுவ மானிய தொகை ரூபாய். 60,000/-ம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் நிறுவும் .சூரிய ஒளிசக்தி மேற்கூரை மின்சார உபகரணங்களுக்கு மானிய தொகை ரூபாய். 78,000/-ம் வழங்கப்படுகிறது.
5. மூலதனத்தொகை 5 வருட காலங்களில் மின் கட்டண சேமிப்பின் மூலம் திரும்ப பெறலாம்.
6. இத்திட்டத்தில் சூரிய ஒளிசக்தி மேற்கூரை மின்சார உபகரணங்கள் நிறுவ வங்கிகள் மூலம் கடன் பெறும் வசதி உண்டு.
7. சூரியஒளி மேற்கூரை மின் சக்தி மின்சார உபகரணம் நிறுவும் போது சராசரியாக 400 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்தும் போது ஏற்படும் சேமிப்பு விபரம் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
இருமாத மின் நுகர்வு மின்சார வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய தொகை
400 யூனிட்கள்: (செலுத்த வேண்டிய தொகை 1125) சூரிய மின் தகடு பொருத்திய பின் 206 சேமிக்கும் தொகை 919
500 யூனிட்கள்: செலுத்த வேண்டிய தொகை 1719 சூரிய மின் தகடு பொருத்திய பின் 476 சேமிக்கும் தொகை 1240
600 யூனிட்கள்: செலுத்த வேண்டிய தொகை 2736 சூரிய மின் தகடு பொருத்திய பின் 1241 சேமிக்கும் தொகை 1495
8. அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் மின் கட்டண இரசீது மட்டுமே
பதிவேற்றம் செய்ய இணையதளம் முகவரி www.pmsuryaghar.gov.in www.solarrooftop.gov.in, மொபைல் ஆப் PM-SURYAGHAR மற்றும் QRT PM SURYAGHAR
இத்திட்டம் தொடர்பாக எழும் சந்தேகங்களை நிவிர்த்தி செய்திட அருகாமையிலுள்ள மின் விநியோக அலுவலகத்தை நேரில் அணுகாலம் அல்லது கீழ் காணும் அலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
உதவி செயற்பொறியாளர்/திட்டங்கள் - 9445854568
உதவி பொறியாளர்/ மேம்பாடு - 9445854481
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வாயிலாக அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் சூரிய ஒளிசக்தி மேற்கூரை திட்டத்தில் நுகர்வோர் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
"சூரியஓளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, பசுமையான, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்று ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.