சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தனியார் நிறுவன ஊழியர்களுடன் ராமாபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. திருவொற்றியூரில் இருந்து சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனார்.
இந்த விபத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.