தொடரும் கனமழை... கதறும் மக்கள்.... கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Dinamaalai May 24, 2025 07:48 PM

கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், 12 மாவட்டங்களில் அதிகனமழைக்கான மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மே 26ம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த சமயங்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய  12 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கண்ணூர், காசர்கோடு மஞ்சள் அலர்ட்; பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டடங்களில் நாளை மே 25ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுதினம் மே 26ம் தேதி  திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது. 

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில்  ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அதிகனமழை பெய்யும். 11 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும். மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் 6 செ.மீ., முதல் 11 செ.மீ., மழை பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.