இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
Top Tamil News May 24, 2025 08:48 PM

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்தது பிசிசிஐ.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பண்ட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து- இந்தியா அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை அறிவித்தது பிசிசிஐ. 

இந்திய டெஸ்ட் அணியில் சுப்மல் கில்( கேப்டன்), ரிஷப் பண்ட்( துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், கருண் நாயர், ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆர்ஸ்தீப் சிங், அபிமன்யூ ஈஸ்வரன், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சர்பராஸ்கான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சமி ஆகிய மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.